பால்கி இயக்கத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்க இருப்பதை உறுதி செய்தார் தனுஷ்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், இந்தியில் தனுஷ் அறிமுகமான படம் 'ராஞ்ஹானா(Raanjhanaa)'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அப்படம் இந்தியில் தனுஷிற்கு ஏற்ற அறிமுகப் படமாக அமைந்தது.
அப்படத்தினைத் தொடர்ந்து இந்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் தனுஷ். ஆனால் தனக்கு ஏற்றவாறு கதை வரும்வரை காத்திருந்தார்.
பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மூவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இச்செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் இச்செய்தியினை உறுதி செய்திருக்கிறார். "அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கவிருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இளையராஜா சார் இசை, பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவு செய்ய பால்கி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.” என்று தனுஷ் கூறியுள்ளார். அக்ஷரா ஹாசன் நடிக்க இருக்கிறாரா என்பது குறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.
'சீனி கம்','பா' என வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் பால்கி. மேலும், இப்படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்ததாகவும், அந்த வேடத்தில் இப்போது தனுஷ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago