வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர்
இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர். இவர், அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகர்களை இயக்கியவர். தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார் கரண் ஜோஹர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் "எனது வாழ்க்கையில் இரண்டு அற்புதமானவர்கள் சேர்ந்திருப்பது குறித்து உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. எனது குழந்தைகள், ஜீவாதாரங்கள், ரூஹி மற்றும் யாஷ். எனது இதயத்தின் அங்கமான இவர்களுக்கு தந்தையாக இருப்பதை ஆசிர்வாதமாக உணர்கிறேன். மருத்துவ அறிவியலின் அற்புதத்தால் இவர்கள் இந்த உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்கள்.
இது ஒரு உணர்வுபூமான, அதே சமயம் ஆழ்ந்த யோசனைக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு. தந்தையாக இருந்தால் என்ன பொறுப்புகளும், கடமைகளும் இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு எடுக்கப்பட்ட முடிவு. என்னிடமிருந்து என் குழந்தைகள் நிபந்தனையற்ற அன்பையும், கவனிப்பையும், அக்கறையையும் பெற வேண்டும் என்பதை உறுதிபடுத்த, இந்த முடிவை எடுக்க நான் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வுபூர்மாகவும், பொருளாதார ரீதியாகவும் தயார் செய்துள்ளேன்.
எனது குழந்தைகள் தான் எனது உலகம். அவர்களே எனக்குப் பிரதானம் என்ற உண்மைக்கு நான் என்னை சமர்ப்பித்துவிட்டேன். எனது வேலை, பயணம் மற்றும் இன்னபிற கடமைகள் சற்று தொய்வடையும், அதற்கு நான் தயாராகவும் இருக்கிறேன். கடவுளின் அருளால், அதிக அக்கறையும், ஆதரவும் தரும் அம்மா எனக்குக் கிடைத்துள்ளார். அவரது பேரக் குழந்தைகளின் வளர்ப்பில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கும். குடும்பமாக இருக்கும் நண்பர்களுக்கும் தான்.
எனது குழந்தைகளுக்கு மென்மையான, அன்பான, ஆரோக்கியமான சூழலைத் தந்து, எனது நீண்ட்நாள் கனவை நனவாக்கிய வாடகைத் தாய்க்கு என்றென்றும் நான் நன்றியுடன் இருப்பேன். எனது பிரார்த்தனைகளில் எப்போதும் அவர் இருப்பார்.
கடைசியாக, இந்த அற்புதமான, சுவாரசியமான பயணத்தில், குடும்பத்தில் ஒருவர் போல இருந்து வழிகாட்டி, ஆதரவளித்த டாக்டர் ஜதின் ஷா அவர்களுக்கு நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார் கரண் ஜோஹர்.
கரண் ஜோஹரின் இந்த முடிவு இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago