சின்னத்திரையில் கரீனா கபூர்: அதிக சம்பளம் பெறும் பெண் நட்சத்திரமானார்

By ஸ்கிரீனன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக சம்பளம் பெறும் பெண் நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகை கரீனா கபூர்.

‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ என்ற ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் நடுவராகத் தோன்றவுள்ளார் கரீனா. 38 வயதான கரீனாவுக்கு, இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படாத அளவு சம்பளம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றிப் பேசியுள்ள கரீனா, "சம்பளம் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், தொலைக்காட்சிக்காக அதிக உழைப்பைப் போடுகிறோம். ஒரு ஆண் நடுவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறதென்றால், பெண் நடுவருக்கும் தரப்பட வேண்டும்.

ஒரு திரைப்பட நடிகை, இப்படியான நிலையில் தொலைக்காட்சிக்குள் நுழைவது இதுவே முதல்முறை.  நான் எதற்குத் தகுதியானவளோ, எவ்வளவு மணி நேரங்கள் வேலை செய்யவிருக்கிறேனோ, அதைத்தான் நான் பெறுகிறேன்.

12-14 மணி நேரங்கள் என தொலைக்காட்சிக்கான வேலை நேரம் அதிகம். தைமூர் பிறந்தபின், நான் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை. நான் வேலைக்குப் போகும் தாய். நான், என் குழந்தையுடன் வீட்டிலும் நேரம் செலவிட வேண்டும். என் குழந்தை இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பு நான் வீட்டில் இருக்க விரும்புகிறேன்.

அந்த நேரத்தில் வேறெங்கும் இருப்பதைவிட, என் குழந்தையுடனும் குடும்பத்துடனும்தான் இருக்க விரும்புகிறேன். ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அதுதான் எனக்கிருக்கும் ஒரே சவால். ஏனென்றால், 12 மணி நேரம் படப்பிடிப்பு நடக்கும். அதையும் இதையும் ஒழுங்காகச் சமாளிக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்