உதவியாளர் ஷீத்தல் ஜெயின் மரணம்; என் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம்: அமிதாப் பச்சன் உருக்கம்

By ஸ்கிரீனன்

உதவியாளர் ஷீத்தல் ஜெயின் மரணத்தால் எனது தினசரி வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அமிதாப் பச்சன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனிடம் உதவியாளராக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர் ஷீத்தல் ஜெயின். இவர் கடந்த வாரம் காலமானார். அவருக்கு வயது 77.

அவரது இறுதிச் சடங்கில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் கலந்து கொண்டனர். மேலும், ஷீத்தல் ஜெயினின் உடலை அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தூக்கிச் சென்ற புகைப்படமும் இணையத்தில் வெளியானது. பலரும் அமிதாப் பச்சனின் செயலை மிகவும் பாராட்டினார்கள்.

மேலும், தன் உதவியாளர் ஷீத்தல் ஜெயின் மறைவு குறித்து அமிதாப் பச்சன் தனது வலைப்பூவில், “கிட்டத்தட்ட 40 வருடங்களாக என் வேலைச் சுமைகளை சுமந்தவர். மென்மையானவர். கடும் உழைப்பாளி. எளிமையானவர். நேர்மைக்கான எடுத்துக்காட்டு. இன்று அவரது இறுதிப் பயணத்தில் அவரைச் சுமந்து சென்றேன்.

எனது வாழ்க்கையில் எல்லா காலகட்டத்திலும் என்னுடன் இருந்த மேலாளர், உதவியாளர் ஷீத்தல் ஜெயின். மருத்துவமனையில் கடுமையாகப் போராடிய பின் இன்று காலை காலமானார். இந்த 40 வருடங்களாக அவருடன் இருந்தது, ஒரு குடும்ப உறுப்பினராக அவர் இருந்தது என் கண் முன் காட்சிகளாக வந்து போனது. உழைப்பின் மீது அவருக்கு இருந்த அர்ப்பணிப்பும், பக்தியும், அவரது மென்மையான தன்மையும் அவருக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

மிகவும் உணர்ச்சிகரமானவர். குடும்பத்தில் எந்த ஒரு அசம்பாவிதம் என்றாலும் தாங்கிக்கொள்ள மாட்டார். அவர் எனக்காக வேலை செய்தார் என்பதை வெளியுலகுக்கு காட்டிக் கொண்டதேயில்லை. எனது அட்டவணை, படப்பிடிப்பு, தயாரிப்பாளர்களுடனான சந்திப்பு என அனைத்தையும் ஒழுங்காகத் திட்டமிட்டு வைப்பார். எங்கள் குடும்பத்தினரால் செல்ல முடியாத விசேஷங்களுக்கு, எங்கள் சார்பாக அவரைத்தான் அனுப்பி வைப்போம்.

எளிமையான மனிதர். நாங்கள் அவருக்குச் செய்த எந்த ஒரு உதவிக்கும் அவர் காட்டிய நன்றி அளப்பரியது. இது போன்ற மனிதர்கள் இப்போது கிடைப்பதில்லை. என் அலுவலகத்தில், எங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது” என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்