‘கிரிக்கெட்டின் கடவுள்’ என சச்சின் டெண்டுல்கரைப் புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘83’ என்ற இந்திப் படம் தயாராகிறது. உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கு எப்படி பெருமை தேடிக் கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி என்பதுதான் இந்தப் படத்தின் சாரம்சம்.
கபிர் கான் இயக்கும் இந்தப் படத்தில், அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில், ரன்வீர் சிங் நடிக்கிறார். அவருடைய பயிற்சியாளராக நவாஸுதீன் சித்திக் நடிக்கிறார். ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
இந்தப் படத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜீவா. இதுதான் அவர் நடிக்கும் முதல் இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு, தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரையும் சந்தித்துள்ளார் ரன்வீர் சிங். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அந்தப் பிரபலங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கமென்ட் செய்துள்ளார்.
‘கிரிக்கெட்டின் கடவுள்’ என சச்சினையும், ‘யாருடனும் ஒப்பிட முடியாத மனிதர்’ என விவி ரிச்சர்ட்ஸையும், ‘ஸ்பின் கிங்’ என ஷேன் வார்னேவையும், ‘த லிட்டில் மாஸ்டர்’ என சுனில் கவாஸ்கரையும் குறிப்பிட்டுள்ளார்.
ரன்வீர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கல்லி பாய்’, மிகப்பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
40 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago