ஹாட் ஸ்டார் நிறுவனம் ‘கிரிமினல் ஜஸ்டீஸ்’ என்ற பெயரில் தனது 2-வது வெப் சீரீஸை ரிலீஸ் செய் துள்ளது. விக்ராந்த் மாஸ்ஸெ நாயகனாக நடிக்கும் இந்த வெப் சீரீஸில் பாலிவுட் நடிகர் கள் பங்கஜ் த்ரிபாதி, ஜாக்கி ஷெராஃப் இருவரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
கால்பந்தாட்ட வீரரான ஆதித்ய ஷர்மா (விக்ராந்த் மாஸ்ஸெ) மும்பையில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன். ஒரு நாள் இரவு தனது தந்தையின் கால் டாக்ஸியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்படுகிறார். போகும் வழியில் எதிர் பாராதவிதமாக ஓர் இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் இறக்கிவிட வேண்டிய சூழல். அந்தப் பயணத்தின் முடிவில் அந்தப் பயணி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
யார் அவர்? எப்படி இறக்கிறார்? அந்த மரணத்துக்கும் ஆதித்யா வர்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதோடு இது காவல்துறை கவனத்துக்கு வந்து ஒரு கட்டத்தில் பெரும் வழக்காக உருமாறவும் செய்கிறது. இதை ஆதித்யா வர்மா எப்படி எதிர்கொள்கிறார்? அவரைச் சுற்றி அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள்தான் இந்த ‘கிரிமினல் ஜஸ்டீஸ்’ சீரீஸின் கதை.
ஹிந்தி மொழியில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரீஸ்ஸை மொத்தம் 10 அத்தியாயங்களாக ஹாட் ஸ்டார் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பரபரப்பான மும்பை நகரின் இரவையும், பகலையும் பதிவு செய்திருக்கும் இந்த ‘கிரி மினல் ஜஸ்டீஸ்’ வெப் சீரீஸின் அனைத்து அத்தியாயங்களும் திரில்லர் பின்னணியில் வழக்கு தொடர்பான காட்சிகளை மையம் அடக்கியதாக எடுக்கப்பட்டிருக்கிறது.
‘கிரிமினல் ஜஸ்டீஸ்’ வெப் சீரீஸ் 10 அத்தியாயங்களையும் தற்போது ஹாட் ஸ்டார் குழு டிஜிட்டல் தளத்தின் வழியே பார்வையாளர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வெப் சீரீஸ் தொடர்பாக சமீபத்தில் மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை ‘ஹாட் ஸ்டார்’ ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் த்ரிபாதி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட வெப் சீரீஸ் நடிகர்கள் கலந்துகொண்டனர்.
தனது நடிப்பு அனுபவம் குறித்து பாலி வுட் நடிகர் பங்கஜ் த்ரிபாதி பேசும்போது,
‘‘டிஜிட்டல் உலகம் இன்றைக்கு புதிய அத்தியாயத்தை கையில் எடுத்துள்ளது. அதற்கு இனி இறங்குமுகம் இருக்கப் போவ தில்லை. சினிமா களம் வேறு. இந்தக் களம் வேறு. டிஜிட்டல் தளத்தில் அமர்ந்து இயல் பாக படம் பார்க்கும் அனுபவத்தை வேறு எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாத உணர்வை இன்றைக்கு அது அளித்து வருகிறது.
ஒரு திரைப்படம் வழியே 2 மணி நேரத் துக்குள் அனைத்து கதாபாத்திரங்களின் பங்களிப்பை விவரித்தாக வேண்டும். இந்த மாதிரி வெப் சீரீஸ் வழியே விரிவாக நிதானமாக அதே நேரத்தில் அழுத்தமான பொறுப்புடன் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த முடியும். இதில்தான் அது சாத்தியமும்கூட. வழக்கறிஞராக இந்த வெப் சீரீஸில் நடித்திருக்கிறேன். மிகவும் முக்கிய மான, பலமான கதாபாத்திரமாக இதை உணர் கிறேன். இந்த பாத்திரம் எனக்கு அமைந்தது காலகட்டத்தின் அதிர்ஷ்டமாகவும் உணர் கிறேன்!’’ என்றார்.
‘கிரிமினல் ஜஸ்டீஸ்’ வெப் சீரீஸ் நடிப்பு அனுபவம் குறித்து ஜாக்கி ஷெராஃப் கூறிய தாவது: கடந்த 38 வருஷ சினிமா பயணத் தில் தற்போது மீண்டும் புதிதாக பிறந்தவ னாக கருதுகிறேன். இது எனக்கு அறிமுக வெப் சீரீஸ். கிட்டத்தட்ட 250-க்கும் மேலான படங்களில் நடித்திருக்கிறேன். இந்த வெப் சீரீஸில் நடித்த அனுபவம் புதிது. சிறைக்குள் நான் என்னென்னவெல்லாம் செய்வேன் என்பதை யாராலும் கணிக்க முடியாத அள வுக்கு அமைக்கப்பட்ட திரைக்கதை வடிவம் இது. வெப் சீரீஸ் வழியே நானும் நிறைய கற்றுக்கொண்டேன். என்னிடம் இருந்தும் இந்த வெப் சீரீஸ் கிரியேட்டிவ் குழு நிறைய கற்றுக்கொண்டதாக நினைக்கிறேன்.
நான் எந்த ஏரியாவில் பிறந்து வளர்ந் தேனோ, அதே பகுதி பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக இது அமைந்ததால் எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு காலி டப்பாவைப் போல என்னை வெறுமையாக்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு செல்வேன். இயக்குநர் குழு அதை அழ காக பயன்படுத்திக்கொண்டு என்னை முழுமையாக்கி படம் பிடித்தனர். இந்த மாதிரி அனுபவம் வாழ்க்கையில் கலைஞ னாக பிறந்தவனுக்கு அவசியம் இருக்க வேண்டும். எனக்கு அமைந்தது மகிழ்ச்சி!’’ என்றார்.
இந்த ‘கிரிமினல் ஜஸ்டீஸ்’ வெப் சீரிஸ்ஸை இந்தி, தமிழ், மராட்டி, தெலுங்கு உள்ளிட்ட 7 மொழிகளில் ஹாட்ஸ்டார் நிறு வனம் தயாரித்துள்ளது. இதுதவிர, நேரடி யாக தமிழில் ஒரு வெப் சீரீஸை இயக்கி வெளியிடும் வேலையையும்இந்நிறுவனம் செய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago