தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மறைந்த தனது குழு உறுப்பினர் ஒருவரைப் பற்றி பேசுகையில் உடைந்து அழுதுள்ளார் சன்னி லியோன்.
நடிகை சன்னி லியோனின் குழுவில் நீண்டகாலமாக இருந்தவர் பிரபாகர். சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் சமீபத்தில் இவர் இறந்தார். இவரது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டு சன்னி லியோன் பதிவிட்டார்.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கும்போது, உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாதா? என பலர் அவரை வசைபாடினர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சன்னி லியோனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
"நான் அந்தப் பதிவைப் போடுவதற்கு பல நாட்கள் முன்பிலிருந்தே பிரபாகர் உடல்நலம் மோசமாகத்தான் இருந்தது. நானும், எனது கணவரும் பிரபாகரின் அனைத்து நிதி தேவைகளையும் பார்த்துக் கொண்டோம். மருத்துவமனை கட்டணம், டயாலிசிஸ் என அனைத்துக்கும் பணம் கொடுத்தோம்.
ஆனால் இதுமட்டுமல்ல, அவருக்கு ஒரு குடும்ப உள்ளது. சில வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர்களுக்குப் பணம் தர வேண்டியிருந்தது. அவருக்கு ஒரு மகன் இருந்தான், அவனுக்கான செலவுகள் இருந்தன. இதையெல்லாம் மனதில் வைத்துதான் அந்தப் பதிவை பகிர்ந்தேன். அதுவும் நான் அதில் குறிப்பிட்டது, தேவைப்படும் பணத்தில் ஒரு சிறு பகுதியே.
பிரபாகர் எதுவும் கேட்டதில்லை. அமைதியானவர், அதிகம் பேசமாட்டார். ‘வெளிப்படையாக எனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், உதவி செய்யுங்கள்’ என்று கூட கேட்காதவர். (இந்தக் கட்டத்தில் சன்னி லியோன் அழ ஆரம்பித்துவிட்டார்).
மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால், நாங்கள் தோற்றுவிட்டோம். அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. அவரது இழப்பு எங்களைப் பாதித்துள்ளது" என்று பதிலளித்துள்ளார் சன்னி லியோன்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago