காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியர்கள் இத்தாலியின் அடிமைகளாக இருந்ததாகக் கடுமையாக சாடியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
நாடு முழுவதும் 71 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத்தும் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரனாவத், "இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். இத்தகைய நாள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகிறது. இந்தியாவுக்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பேன்.
இதற்கு முன் இந்தியாவை பிரிட்டன் ஆட்சி செய்தது. பின்னர் முகலாயர்கள் ஆட்சி செய்தனர். அப்புறம் இத்தாலியர்கள் ஆட்சி செய்தனர்.
அதனால், உங்கள் உரிமையை நிலைநாட்ட இன்று பெருமளவில் வாக்களியுங்கள்" என்று கூறியுள்ளார்.
இத்தாலிய அரசு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியையே மறைமுகமாக சுட்டிக்காட்டி கங்கனா பேசியிருக்கிறார்.
அவர் மேலும் பேசும்போது, "காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசியல் தலைவர்கள் லண்டனில் பொழுதைப்போக்கினர். இங்கே தேசத்தில் வறுமையும், மாசும், பலாத்காரங்கள் போன்ற அவலங்கள் நிலவின.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நம் நேரம் வந்துவிட்டது. நாம் பெருமளவில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago