பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'தபாங் 3' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர், நடன இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என்று பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார் பிரபுதேவா. தமிழில் விஷால் நடித்த 'வெடி' படமே இவரது இயக்கத்தில் வெளியான கடைசிப் படமாகும்.
இந்தியில் 2015-ம் ஆண்டு அக்ஷய் குமார் நடித்த 'சிங் இஸ் ப்ளிங்' படமே இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியானது. அதனைத் தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் 'தபாங் 3' படத்தை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பு எப்போது, யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) 'தபாங் 3' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. சல்மான் கானுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.
தமிழில் நாயகனாக 'தேவி 2', 'எங் மங் சங்', 'பொன் மாணிக்கவேல்', 'தேள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் பிரபுதேவா. தற்போது பட இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்களுக்கு நடிக்க மாட்டார் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago