ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் ’சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சபாக்’ திரைப்படத்தை, ‘ராசி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இயக்குகிறார். அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி ‘சபாக்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ‘சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாகக் காணப்படுகிறார் திபீகா.
இந்த போஸ்டரில் தீபிகாவின் ஒப்பனையையும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பாராட்டி தீபிகா படுகோனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யார் இந்த லஷ்மி அகர்வால்
டெல்லியை சேர்ந்த லஷ்மி என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு காதலிக்க மறுத்த காரணத்துக்காக ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிலையில், பல இன்னல்களைக் கடந்து லஷ்மி இப்போது வெற்றிகரமான பெண்மணியாக இருக்கிறார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்விற்கென தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, அவர்களின் சிகிச்சைக்கு லஷ்மி உதவி வருகிறார். இதற்காக 2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி லஷ்மியைப் பெருமைப்படுத்தினார்.
இவரது பிரச்சாரத்தின் மூலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்களுக்கு டெல்லி அரசாங்கம் பணி வழங்கியது.
லஷ்மியின் இந்தப் பயணத்தில், அவருக்குத் துணையாய் நின்று தைரியம் அளித்தவர் சமூக ஆர்வலர் அலோக் தீக்ஷித். அவரைத் திருமணம் செய்துகொண்ட லஷ்மிக்கு, புகு என்ற பெண் குழந்தை உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago