ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான கடைசிப் படமான ‘மாம்’, சீனாவில் வெளியாக உள்ளது.
ரவி உத்யாவார் இயக்கத்தில், மறைந்த ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘மாம்’. இந்தப் படம் தமிழில் ‘அம்மா’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. ஸ்ரீதேவின் 300-வது படமான இதுதான், அவரின் கடைசிப்படமும் கூட.
ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் தயாரித்த இந்தப் படம், 2017-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி வெளியானது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், பயாலஜி டீச்சராகவும் இந்தப் படத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தில், நவாஸுதீன் சித்திக் துப்பறியும் அதிகாரியாக நடித்தார்.
‘மாம்’ படத்தில் நடித்ததுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ஸ்ரீதேவிக்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 300 படங்களில் நடித்த ஸ்ரீதேவிக்கு கிடைத்த முதல் தேசிய விருது இது. ஆனால், அந்த விருதை வாங்க அவர் உயிருடன் இல்லை என்பது சோகம்.
சிறந்த நடிகைக்கான விருது மட்டுமின்றி, சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் (ஏ.ஆர்.ரஹ்மான்) ‘மாம்’ படத்துக்குக் கிடைத்தது.
இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 37 நாடுகளில் ‘மாம்’ படம் ரிலீஸாகியுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் எல்லா நாடுகளிலும் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவிலும் ‘மாம்’ படம் ரிலீஸாகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 22-ம் தேதி சீனாவில் இந்தப் படத்தை வெளியிட இருப்பதாக ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago