நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. அதில் என் மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
குஷியும் ஜான்வியும் அவர்களது அம்மாவைப் பின்பற்றுகிறார்கள். ஸ்ரீதேவி, தான் நடித்த அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மகள்களும் அதே அளவு வெற்றியைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். ஸ்ரீதேவியின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் எண்ணமில்லை” என்றார்.
ஸ்ரீதேவி வாழ்க்கையைப் படமாக்க மாட்டோம் என்று கடந்த ஆண்டும் போனிகபூர் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago