மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவாகியுள்ள திரைப்படமான ‘சாவா’ (Chhaava) படத்துக்கு அனைத்து மாநிலங்களிலும் வரி விலக்கு வேண்டுமென சிவசேனா கட்சி (உத்தவ் அணி) எம்.பி பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தப் படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். இதில் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு மத்திய பிரதேசம் மற்றும் கோவாவில் வரி விலக்கு வழங்குவதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தப் படம் மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் சிறப்பு காட்சிகளுக்கும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன. வியாழக்கிழமை நிலவரப்படி இந்தப் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது.
“சாவா படத்துக்கு அனைத்து மாநிலங்களும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கைக் கதையை நாட்டில் உள்ள அனைத்து மாநில எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்படுவதன் மூலம் நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை மக்கள் பரவலாக அறிந்து கொள்ள முடியும்” என பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago