அட்லீ தயாரிப்பில் நடிக்கும் ஷாகித் கபூர்!

By ஸ்டார்க்கர்

ஷாகித் கபூர் நடிக்கவுள்ள புதிய படத்தினை அட்லீ தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

‘பேபி ஜான்’ தயாரிப்பைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கவனித்து வருகிறார் அட்லீ. இதனிடையே தனது அடுத்த இந்தி தயாரிப்பையும் முடிவு செய்துவிட்டார். அதில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் இந்தப் பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை என்பதால், அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறார்கள்.

இந்த முறை ரீமேக் படமாக அல்லாமல் நேரடி கதையாக தயாரிக்கவுள்ளார் அட்லீ. கமர்ஷியல் படமாக உருவாகும் இதனை அவரது உதவியாளர் இயக்கவுள்ளார். தற்போது ஒப்பந்தங்கள் தயாராகி வருகின்றன.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்துள்ள ’தேவா‘ படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அட்லீ தயாரிப்பில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஷாகித் கபூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்