எனது பெயரை தவறாகப் பயன்​படுத்து​வதா? - நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்​தில், ‘மஹ்​தாரி வந்தன் யோஜனா’ என்ற திட்​டத்​தின் கீழ் திரு​மணமான பெண்​களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்​கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.

இந்த திட்​டத்​தில் நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்​கப்​பட்ட வங்கிக் கணக்​குக்கு மாதம் ரூ.1000 அனுப்​பப்​பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்​தனர். விசா​ரணை​யில், அம்மாநிலத்​தின் பஸ்தார் பகுதி​யில் உள்ள தலூர் கிராமத்​தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரில் கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடி​யில் ஈடுபட்டது தெரிய​வந்​தது. அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை பெயரில் போலி கணக்கை உருவாக்கி அரசுத் திட்​டத்​தில் மோசடி செய்த விவகாரம், அம்மாநிலத்​தில் சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இந்த மோசடி குறித்து பாஜக அரசை, காங்​கிரஸ் குறை கூறியது. ‘மஹ்​தாரி வந்தன் யோஜனா’ திட்​டத்​தின் கீழ் பணம் பெறும் 50 சதவிகித பயனாளிகள் போலி​யானவர்கள் என்று குற்றம் சாட்​டி​யுள்​ளது.

இந்நிலை​யில், தனது பெயரைத் தவறாகப் பயன்​படுத்​தி​யதற்காக நடிகை சன்னி லியோன் கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்​தில், “எனது பெயரை​யும் அடையாளத்​தை​யும் தவறாகப் பயன்​படுத்தி மோசடி​யில் ஈடுபட்​டிருப்பது துரதிர்​ஷ்ட​வச​மானது. பெண்​களுக்கு அதிகாரமளிக்​க​வும் அவர்கள் பயனடைய​வும் உருவான திட்​டத்​தில் இப்படியொரு மோசடி நடந்​திருப்பது வருந்​தத்​தக்​கது. இச்செயலை வன்மை​யாகக் கண்டிக்​கிறேன். இதுபற்றி முழு​மையாக விசாரிக்​கும் அதிகாரி​களின் முயற்சி​களுக்கு ஆதரவளிக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்