மும்பை: உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று (டிச.23) மாலை 6.30 மணியளவில் பிரிந்தது. அவரது இந்திய மறைவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
கடந்த 14-ம் தேதியன்று ஷியாம் பெனகல் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்நிகழ்வில் அவரது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். நஸ்ருதீன் ஷா, திவ்யா தத்தா, ஷபானா ஆஸ்மி, அதுல் திவாரி, குணால் கபூர் உள்ளிட்ட திரைப் பிரலங்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஷியாம் பெனகல்? - உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் 1934 டிசம்பர் 14-ல் பிறந்தார். 12 வயதில் கேமராவை பயன்படுத்த தொடங்கினார். இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவரது ‘அங்கூர்’ படம் அமைந்தது. 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார்.
புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’, ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
» “நான் ‘வாராரு, வாராரு அழகர் வாராரு’ பாடல் மூலமே பிரபலம் ஆனேன்” - மதுரையில் தேவா பெருமிதம்
» ‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25-ல் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இவரது அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட 7 படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன் எக்ஸலன்ஸ்-ன் சினிமா விருது வழங்கி கவுரவித்தது. வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago