இயக்குநர் அட்லீயிடம் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையானதற்கு கபில் சர்மா விளக்கமளித்துள்ளார்.
‘தெறி’ இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தினை தயாரித்துள்ளார் அட்லீ. இதனை விளம்பரப்படுத்த ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ டிவி நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கலந்துக் கொண்டார். அதில் “நீங்கள் ஒரு நடிகரை முதன்முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறீர்களா” என்று அட்லீயிடம் கபில் சர்மா கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிதானமாக தன் பாணியில் பதிலளித்துவிட்டார் அட்லீ. ஆனால், கபில் சர்மாவின் கேள்வி இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்த வீடியோ பதிவினை பகிர்ந்து பலரும் உருவக் கேலி செய்கிறார் கபில் சர்மா என்று கடுமையாக சாடினார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த வீடியோ பதிவினை பகிர்ந்து கபில் சர்மா, ”டியர் சார், இந்த வீடியோவில் நான் எங்கு எப்போது தோற்றம் குறித்து பேசி இருக்கிறேன் என்பதை விளக்க முடியுமா? தயவுசெய்து சமூக வலைதளங்களில் வெறுப்பை பரப்ப வேண்டாம். மக்கள் நீங்களே பார்த்து முடிவு செய்யவும், யாருடைய பதிவையும் செம்மறி ஆட்டை போல பின் தொடர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago