சினிமாவில் இருந்து விலகவில்லை; தவறாக புரிந்து கொண்டார்கள்: விக்ராந்த் மாஸே விளக்கம்

By செய்திப்பிரிவு

இந்தி நடிகர் விக்​ராந்த் மாஸே, ‘12த் ஃபெயில்’ படம் மூலம் கவனிக்​கப்​பட்​டார். ‘செக்டர் - 36’, ‘த சபர்மதி ரிப்​போர்ட்’ உட்பட பல படங்​களில் நடித்​துள்ள அவர், நடிப்​பிலிருந்து விலகு​வதாக அவர் பதிவை மேற்​கோள்​காட்டி செய்தி வெளி​யானது. அவர் வெளி​யிட்ட பதிவில், “கடந்த சில வருடங்கள் அற்புதமாக அமைந்தன. எனக்கு ஆதரவளித்​தவர்​களுக்கு நன்றி. ஒரு கணவனாக, தந்தை​யாக, மகனாக இப்போது குடும்பத்​தைக் கவனிக்க முடி​வெடுத்​துள்ளேன்.

அடுத்த ஆண்டில் (2025) இறுதியாக ஒருமுறை சந்திப்​போம்” எனத் தெரி​வித்​திருந்​தார். அவர் சினி​மாவை விட்டு விலக முடிவு செய்​துள்ள​தாக​வும் அவர் தனது முடிவை மாற்ற வேண்​டும் என்றும் திரை​யுல​கினரும், ரசிகர்​களும் கோரிக்கை வைத்​தனர். இந்நிலை​யில், தான் நடிப்பை விட்டு விலக​வில்லை என்று விக்​ராந்த்மாஸே தெரி​வித்​துள்ளார். மேலும், “என் உடல்​நிலை காரண​மாக​வும் குடும்பத்​துக்​காக​வும் நீண்ட இடைவெளி தேவை. நான் கூறியதை தவறாகப் புரிந்​து​கொண்​டார்​கள்” என்று கூறியுள்ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்