மத்திய பிரதேசம்: விக்ராந்த் மாஸ்ஸி நடித்துள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ பாலிவுட் படத்துக்கு வரி விலக்கு அளித்து மத்திய பிரேதச அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படத்தை தீரஜ் சர்ணா இயக்கியுள்ளார். விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளித்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தி சபர்மதி ரிப்போர்ட் மிகச்சிறந்த திரைப்படம். நான் இந்த திரைப்படத்தை பார்க்க இருக்கிறேன். அத்துடன் என்னுடைய எம்எல்ஏ, அமைச்சர்கள், எம்.பி உள்ளிட்டோரையும் இந்தப் படத்தை பார்க்க பரிந்துரைத்துள்ளேன். படத்தை பெரும் அளவிலான மக்கள் பார்க்கும் வகையில் மாநிலத்தில் படத்துக்கு வரி விலக்கு அளித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்பது கடந்த காலத்தின் கருப்பு பக்கம். அந்த சம்பவத்தின் உண்மையை இந்தப் படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. எதிர்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற போது குஜராத்தில் முதல்வராக இருந்த பிரதமர் மோடி மாநிலம் மற்றும் நாட்டின் கவுரவத்தை காத்தார்” என்றார். முன்னதாக இந்தப் படத்தை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் சமீபத்திய வரலாற்றின் மிகவும் அவமானகரமான நிகழ்வின் உண்மையை வெளி கொண்டு வந்துள்ள சிறந்த படம்” என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago