மும்பை: விக்கி கவுசல் நடிக்கும் ‘மஹாவதார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமராக விக்கி கவுசல் நடிக்கிறார்.
பாலிவுட்டில் அண்மையில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த படம் ‘ஸ்ட்ரீ 2’. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.850 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தின் இயக்குநர் அமர் கவுஷிக் அடுத்ததாக விக்கி கவுசலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘மஹாவதார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில் பரசுராமராக விக்கி கவுசல் நடிக்கிறார். இந்தப் படத்தை தினேஷ் விஜயன் தயாரிக்கிறார். படத்தின் முதல் தோற்றத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் அமர் கவுஷிக், “நித்திய தர்ம வீரரின் கதை” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் 2026-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» கண்களால் கைது செய்யும் சாக்ஷி அகர்வால் க்ளிக்ஸ்!
» நலன் - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர் எப்படி? - ஈர்க்கும் கெட்டப், இசை!
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போடஸ்டரில் முழுக்க தாடி, மீசையுடன், பிரமாண்டமான கட்டுடலுடன் காட்சியளிக்கிறார் விக்கி கவுசல். அவரைச்சுற்றியிலும் தீ பரவி கிடக்கிறது. புராண கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago