90’ஸ் தொடரான ‘சக்திமான்’ ரிட்டர்ன் - டீசருடன் முகேஷ் கண்ணா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: 90களில் வெளியாகி ஹிட்டடித்த ‘சக்திமான்’ தொடர் மீண்டும் வெளியாக இருப்பதாக, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சக்திமான் கதாபாத்திரம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்தக் கதாபாத்திரத்துக்கான ஆடையை நான் எப்போதும் என்னுடைய வைத்திருக்கிறேன். இந்தத் தொடரின் படப்பிடிப்பின்போது நான் கேமராவை மறந்து உற்சாகத்துடன் நடித்தேன். மற்ற எல்லோரையும் விட மீண்டும் சக்திமானாக நடிக்க இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

1997-ல் தொடங்கிய 2005 வரை சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்தேன். தற்போது 2027-ல் உள்ள இன்றைய தலைமுறையினருக்கும் அது சென்று சேர வேண்டும் என நினைக்கிறேன். காரணம் இன்றைய தலைமுறையினர் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை நிதானப்படுத்தும் வகையில் இந்தத் தொடர் விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சக்திமான் கதாபாத்திர உடை அணிந்து பள்ளிக் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்று தொடர்பான பாடம் எடுக்கிறார். வீடியோவின் இறுதியில் ‘விரைவில் வருவேன்’ என்றும் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் வெளியான சூப்பர் ஹீரோ தொடர் ‘சக்திமான்’. 450-க்கும் அதிகமான எபிசோடுகள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் சக்திமான் தொடர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை சிலர் வரவேற்றாலும், நெட்டிசன்கள் பலரும், “பழைய தொடரின் நினைவுகள் அப்படியே இருக்கட்டும். புதிதாக கொண்டுவந்து அதை சீரழித்துவிட வேண்டாம்” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்