“முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை; இந்தியாவில் நிம்மதியாக வாழலாம்!” - நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 

By செய்திப்பிரிவு

மும்பை: “முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது” என பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘12த் பெயில்’ படத்தின் மூலம் பரவலான ரசிகர்களைப் பெற்றவர்.

இந்நிலையில், ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள விக்ராந்த் அளித்த பேட்டியில், “மோசமாக இருக்கும் என கருதும் விஷயங்கள் உண்மையில் மோசமாக இருப்பதில்லை. எனது கண்ணோட்டம் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது. உலகில் நிம்மதியாக வாழ சிறந்த நாடு இந்தியா தான்.

நீங்கள் ஐரோப்பா, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சென்று பாருங்கள். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பது அப்போதுதான் உங்களுக்குத் தெரியும். தற்போதைய சூழலை பொறுத்தவரை வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியாதான். மேலும் நம் நாடுதான் உலகில் எதிர்காலத்திலும் வாழ்வதற்கு தகுதியாக நாடாக இருக்கும். நம் நாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்திய அரசால் நான் தொடர்ந்து கவுரவிக்கப்படுகிறது. புதிய அரசின் பதவி ஏற்பு விழாவுக்கு எனக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

நான் நடித்த ‘12த் பெயில்’ படத்தை அரசு பள்ளிக்கூடங்களில் திரையிடுகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள். இது போன்ற விஷயங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும். எனவே, நல்ல விஷயங்கள் தான் நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார். மேலும், விக்ராந்த் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் பலரும், “பாஜகவை விமர்சித்து வந்த விக்ராந்த் தற்போது தன்னுடைய படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக சந்தர்ப்பவாதியாக மாறியுள்ளார்” என விமர்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்