மும்பை: ரூ.45 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘தி லேடி கில்லர்’ பாலிவுட் திரைப்படம் வெறும் 60,000 ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆனால், இந்தப் படம் யூடியூப்பில் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி வெளியான இந்திப் படம் ‘தி லேடி கில்லர்’. அர்ஜுன் கபூர், பூமி பட்னேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை அஜய் பெகல் இயக்கியிருந்தார். டி-சிரீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. 45 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் படுதோல்வியை தழுவியது. இதன் ஓடிடி உரிமையை முதலில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், படத்தின் பொருட்செலவு அதிகமானதால் கிளைமாக்ஸ் காட்சியை படக்குழு படமாக்கவில்லை. எடிட்டிங்கில் சரி செய்து படத்தை வெளியிட்டு விட்டார்கள். இதனால் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளமும் ‘தி லேடி கில்லர்’ படத்தை திரும்ப அளித்துவிட்டது.
‘தி லேடி கில்லர்’ படத்தினை ஓடிடிக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பிலேயே குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டது படக்குழு. அதன் மூலம் படக்குழுவினருக்கு வந்த வருமானம் வெறும் 60000 ரூபாய் மட்டுமே. இந்தியில் வெளியாகி மிக குறைந்த வசூலை ஈட்டி தோல்வியை தழுவிய படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது ‘தி லேடி கில்லர்’ படத்தை வாங்க யாரும் முன் வராத காரணத்தினால் படக்குழுவினர் யூடியூப் தளத்தில் இலவசமாக வெளியிட்டுவிட்டார்கள். அதில் பார்த்த பார்வையாளர்கள் பலரும், இந்தப் படமா இப்படி ஆனது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், வெளியீட்டு நேரத்தில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்ட படம் இது என்பது நினைவுக் கூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago