மும்பை: ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘ஜிக்ரா’ பாலிவுட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு, ட்ரால் செய்யப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் வசன் பாலன் தனது எக்ஸ் தள கணக்கை டெலிட் செய்துள்ளார்.
‘மோனிகா ஓ மை டார்லிங்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசன் பாலன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜிக்ரா’. ஆலியா பட் நடித்தது மட்டுமல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார். ரூ.80 கோடி பட்ஜெட்டை கொண்ட இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனால் படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், மொத்தமாக ரூ.30 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. இதனால், படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள சிறையில் சிக்கியிருக்கும் தனது சகோதரனை மீட்கப் போராடும் சகோதரியாக ஆலியா பட் நடித்துள்ளார். திரைக்கதை வலு சேர்க்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் ட்ராலுக்கும் ஆளானது.
முன்னதாக படத்தின் இயக்குநர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு படத்தின் வெற்றிக்கான அளவுகோலாக நான் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை பார்க்கவில்லை” என தெரிவித்திருந்தார். இதன்மூலம் இயக்குநர் பார்வையாளர்களின் கருத்துகளை அலட்சியப்படுத்துவதாகவும், திமிராக பேசுவதாகவும் கூறி சமூக வலைதளங்களில் அவர் விமர்சிக்கப்பட்டார். அடுத்தடுத்த விமர்சனங்களால், தனிப்பட்ட தாக்குதல்களால் இயக்குநர் வசன் பாலன் தனது எக்ஸ் தள கணக்கையை டெலிட் செய்துள்ளார்.
» வசீகரிக்கும் வாணி போஜன் க்ளிக்ஸ் - விதவிதமாய்... வண்ணமயமாய்..!
» விமல் - யோகிபாபு இணையும் நகைச்சுவை படத்தின் ஷூட்டிங் நிறைவு
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago