இந்தி நடிகைக்கு கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

நடிகை திரிப்தி டிம்ரி, இந்தியில் வெளியான ‘அனிமல்’ படம் மூலம் பிரபலமானார். இப்போது, ‘விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’, ‘பூல் புலையா 3’ படங்களில் நடித்துள்ளார். இவர், ஜெய்ப்பூரில் பெண் தொழில்முனைவோர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

இதனால் ஆவேசமான பெண் தொழில்முனைவோர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போஸ்டரில் இடம்பெற்றிருந்த அவரது முகத்தில் கருப்பு மையை பூசினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பெண் ஒருவர் கூறும்போது, “திரிப்தி டிம்ரி எங்களை அவமதித்துள்ளார். அவர் நடிக்கும் திரைப்படங்களை ஜெய்ப்பூர் ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் திரிப்தி டிம்ரி தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்விலும் பங்கேற்க உறுதியளிக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்