ராணி முகர்ஜி நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம், ‘மர்தானி’. இதில் ராணி முகர்ஜி, ஷிவானி சிவாஜி ராய் என்ற அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பிரதீப் சர்க்கார் இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இதன் அடுத்த பாகம் 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதை கோபி புத்ரன் இயக்கி இருந்தார். முதல் பாகம் வெளியாகி 10 வருடம் ஆன நிலையில் இதன் 3-ம் பாகத்துக்கான அறிவிப்பை யாஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
ஆணாதிக்கம் மிகுந்த பதவியில் ஒரு பெண் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பதைக் காட்டும் விதமாக ‘மர்தானி’ 3-ம் பாகம் உருவாக இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதுபற்றி ராணி முகர்ஜி கூறும் போது, “மர்தானி வரிசை படத்துக்காக எனக்கு கிடைத்த வரவேற்பும் அன்பும் உண்மையிலேயே சிறப்பானது. அதன் அடுத்த பாகத்தில் நடிக்க இருப்பது பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago