அம்பானி இல்லத் திருமண விழா: ஜான் சீனா, ரஜினி, யஷ், மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் பிரமாண்டமாக நடைபெறும் அம்பானி இல்லத் திருமண விழாவில் டபிள்யூடபிள்யூஇ (WWE) மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா கலந்துகொண்டுள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், யஷ், மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் தம்பதிகளின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ( Jio World Convention Centre) நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஹாலிவுட் நடிகரும், WWE மல்யுத்த வீரருமான ஜான்சீனா மும்பை வந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமணத்தில் கலந்துகொண்டுள்ள அவர் அணிந்திருந்த உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். கன்னட நடிகர் யஷ், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

சஞ்சய் தத், தோனி, ஜாக்கி ஷெராஃப், அனன்யா பாண்டே, ஜெனிலியா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அரசியல் தலைவர்களும், சூப்பர் ஸ்டார்களும் கலந்து கொள்ள உள்ளனர். பிரபலங்களின் வருகையையொட்டி மும்பையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமணம் நடைபெற உள்ள இடத்தையொட்டிய பகுதிகளில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வசதி வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்