மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் (Locarno Film Festival) உயரிய கவுரமாக வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் ‘லோகார்னோ திரைப்பட விழா’ நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 77-வது திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான ‘Pardo alla Carriera Ascona-Locarno Tourism’ எனப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெருகிறார் ஷாருக்கான். இதற்கு முன்னதாக இத்தாலி இயக்குநர் பிரான்செஸ்கோ ரோசி, அமெரிக்க பாடகர்-நடிகர் ஹாரி பெலாஃபோன்டே மற்றும் மலேசிய இயக்குநர் சாய் மிங்-லியாங் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தேவதாஸ்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தொடர்ந்து ஷாருக்கான் உடனான ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திரைப்பட விழாவின் கலை இயக்குநர் நாசாரோ கூறுகையில், “தனக்கு கிரீடம் அணிவித்த மக்களுடன் தொடர்பை இழக்காத கிங் ஷாருக்கான். உலகெங்கிலும் உள்ள தனது ரசிகர்கள் படங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயங்களில் உண்மையாக இருக்கும் ஒருவர். அதே நேரம் பல சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மிகுந்த கலைஞன். ஷாருக்கான் நம் காலத்தின் லெஜண்ட்” என புகழ்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago