சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!

By செய்திப்பிரிவு

மும்பை: அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியின் வாழ்க்கைக் கதை ‘பேடி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. ட்ரீம் ஸ்லேட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை குஷால் சாவ்லா இயக்குகிறார். அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதுபற்றி கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தக் கதை என் கதை மட்டுமல்ல. இந்தியாவில் வளர்ந்த, இந்தியாவில் படித்த, இந்திய பெற்றோரால் வளர்க்கப்பட்ட, இந்திய மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய இந்தியப் பெண்ணின் கதை. சர்வதேச அளவில் நம் தேசத்தைப் பிரதிபலிக்கும் இந்தியப் பெண்ணின் கதையாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

மேலும்