மும்பை: ‘கான் திரைப்பட விழா’வில் கலந்துகொள்வதற்காக கையில் கட்டுடன் மும்பை விமான நிலையம் வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரான்ஸ் நாட்டில் 77-வது ‘கான் திரைப்பட விழா’ 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. புகழ்பெற்ற இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 7 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த விழாவில் இந்திய நடிகைகள் கலந்துகொண்டு சிவப்புக் கம்பள அணிவகுப்பை அலங்கரித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு ‘கான் திரைப்பட விழா’வில் ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதாரி, ஷோபிதா துலிபாலா மற்றும் கியாரா அத்வானி, ஊர்வசி ரவுடேலா ஆகியோர் சிவப்பு கம்பள அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். இந்நிலையில், கான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மும்பை விமான நிலையத்துக்கு தனது மகள் ஆராத்யாவுடன் வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அப்போது காயம் காரணமாக அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சிவப்பு கம்பள அணிவகுப்பில் கையில் கட்டுடன் அவர் பங்கேற்பாரா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2002-ம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா முதன் முதலாக கான் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள அணிவகுப்பில் கலந்துகொண்டார். ஷாருக்கான் நடிப்பில் அந்த ஆண்டு வெளியான ‘தேவதாஸ்’ பாலிவுட் படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago