அமிதாப் பச்சன் பேரன் இயக்கிய குறும்படம்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்த்ய நந்தா, குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராகத் திகழ்பவர் அமிதாப் பச்சன். 75 வயதிலும் இன்னும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மனைவியான ஜெயா பச்சனும் நடிகைதான். இவர்கள் மகனான அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் என எல்லாருமே நடிகர்கள் தான்.

இந்நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நடிகராக அல்ல, இயக்குநராக!

அமிதாப் பச்சன் மகள் ஸ்வேதாவின் மகளான நவ்யா நவேலிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாத நிலையில், மகன் அகஸ்த்ய நந்தா இயக்குநராகக் களம் இறங்கியுள்ளார். 17 வயதான அகஸ்த்ய நந்தா, குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதைப் பார்த்த அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் இருவருமே வியந்து போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறதாம்.

உண்மையில், தன் மகன் அபிஷேக் பச்சன் இயக்குநராக வேண்டும் என்பது ஜெயா பச்சனின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை, அவருடைய பேரன் நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்