தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் சோனு சூட். கரோனா காலகட்டத்தில் இவர் ஏராளமான உதவிகளை மக்களுக்கு செய்துள்ளார். தொடர்ந்து செய்து வருகிறார். சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோ என்று இவரை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி அவருடைய வாட்ஸ்அப் கணக்கு முடங்கி விட்டது. இதனால் தனக்கு மெசேஜ்கள் வரவில்லை என்று, வாட்ஸ் அப் நிறுவனத்தை டேக் செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். தன்னிடம் உதவி கேட்க விரும்புபவர்கள் ஃபோன் பண்ணலாம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை தனது சமூக வலைதளப் பதிவில், எனது வாட்ஸ் அப் இன்னும் வேலை செய்யவில்லை. 36 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தனது வாட்ஸ்அப் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது என்று நேற்று தெரிவித்துள்ள சோனு சூட், கடந்த 61 மணி நேரத்தில் 9483 மெசேஜ்கள் வந்துள்ளதாகக் கூறியுள்ளார். வாட்ஸ்அப் கணக்கை மீட்க உதவிய தொழில்நுட்ப குழுவுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு வைரல் ஆனது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago