27 வயது பெண்ணை மணந்த 52 வயது நடிகர்

By செய்திப்பிரிவு

52 வயதான பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், 27 வயது பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் பிறந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், நீச்சல் வீரர், மாடல் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள இவர், ஆங்கிலம், மராத்தி மற்றும் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘வித்தகன்’, ‘பையா’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

ஃபிரெஞ்ச் நடிகையான மைலேன் ஜம்பனோய் என்பவரை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், விரைவிலேயே அந்தக் காதல் கசந்துவிட, 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர், அங்கிதா கொன்வாருடன் காதல் ஏற்பட்டது. இந்நிலையில், மும்பையில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

52 வயதான மிலிந்த் சோமனை, 27 வயதான அங்கிதாவைத் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்