மும்பை: நடிகை கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கி, நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் ஜூனில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் விஜய் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’க்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் இது.
இதில் நடிகர் மாதவன், நாயகனாக நடிக்கிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. சைக்காலஜி த்ரில்லராக உருவாகும் இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் செட் அமைக்க படக்குழு தயாராக இருந்தது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத், மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். தேர்தலில் பிசியாக இருப்பதால் அது முடிந்த பின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகத் தயாரிப்பாளரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து செட் அமைக்கும் பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago