கூகுள் பே-யில் யாசகம்: ஹினா கான் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகை ஹினா கான். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

காரில், சிக்னலுக்காக காத்திருந்தேன். ஒருவர், கார் கண்ணாடியை தட்டி, யாசகம் கேட்டார். இப்போது பணம் இல்லை என்றேன். காலையில் இருந்து போனி ஆகவில்லை. வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் ‘ஸாரி, என்னிடம் காசு இல்லை’ என்றேன். அவர் வழக்கத்துக்கு மாறாக, ‘பரவாயில்லை மேடம், கூகுள் பே பண்ணுங்கள்’ என்றார். இது அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவர் எண்ணைக் கொடுத்தார். நான் அதில் அவருக்கு பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ‘ஒரு வாரத்துக்கான ரேஷன் செலவுகளுக்கு ஏற்ப பணம் அனுப்புங்க மேடம்’ என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. இப்போது நான் என்ன சொல்ல முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்