‘டான் 3’ படத்துக்கு கியாரா அத்வானி சம்பளம் ரூ.13 கோடி!

By செய்திப்பிரிவு

மும்பை: ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த இந்திப் படம் ‘டான்'. இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் 2011-ம் ஆண்டு வெளியானது. இதிலும் ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த 2 பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார்.

இந்நிலையில் இதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதில் நடிக்க அவருக்கு ரூ.13 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கியாரா அத்வானி இப்போது, ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE