வெட்கக்கேடு! - வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை: துல்கர் சல்மான், ரிச்சா சதா கண்டனம்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தம்பதியினர் மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரிச்சா சதா உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துல்கர் சல்மான்: இதை கேள்விப்பட்டதும் நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் கோட்டயம் பகுதிக்கு வந்தபோது, அங்குள்ள நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு விருந்தளித்திருந்தனர். இதுபோன்ற சம்பவம் எங்கும் யாருக்கும் நடக்கக் கூடாது.

ரிச்சா சதா: வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்துவது போல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் நடத்துகின்றனர். இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.

முன்னதாக, ஸ்பெயின் - பிரேசிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியா வந்துள்ள அந்த தம்பதியினர், கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் சென்றனர். கடந்த வெள்ளி (மார்ச்.01) அன்று டும்கா மாவட்டத்துக்கு சென்ற அவர்களை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவர்களை கொடூரமாக தாக்கி, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம் வெளியிட்ட அறிக்கையையடுத்து அந்த மர்ம நபர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்