அம்பானி இல்ல விழா இசை நிகழ்வு - பாப் ஸ்டார் ரிஹானாவுக்கு ரூ.74 கோடி!

By செய்திப்பிரிவு

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகர் ரிஹானாவுக்கு ரூ.74 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், இவர்களின் திருமணத் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ஜூலை 12-ல் திருமணம் நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். அம்பானி இல்ல விழாவால் குஜராத்தின் ஜாம்நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. உலக அளவில் இருக்கும் முன்னாள் - இந்நாள் பிரதமர்களுக்கும், மார்க் சக்கர்பெர்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் பிரபல பாப் பாடகர் ரிஹானா கலந்துகொண்டு மேடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரது பிரபலமான ஆல்பமான ‘Work’ பாடலையும் பாடி நடனமாடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. இந்த நிகழ்வுக்காக அவருக்கு ரூ.74 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

தமிழகம்

2 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்