உ.பி. போலீஸ் எழுத்துத் தேர்வில் சன்னி லியோன் பெயரில் ஹால் டிக்கெட்!

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரேதசத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் பெயர் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரேதச மாநிலத்தில் போலீஸ் வேலைக்கான தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபற்றது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கன்னாஜில் உள்ள ஸ்ரீமதி சோனிஸ்ரீ மெமோரியல் பெண்கள் கல்லூரி, தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் சமூக வைலதளங்களில் வைரலானது.

இந்த டிக்கெட் போலியானது என்று தெரிவித்துள்ள போலீஸார், விண்ணப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண், உ.பி., மேஹாபாவில் வசிப்பவருக்குச் சொந்தமானது என்றும் முகவரி மும்பையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும்போது நடிகையின் புகைப்படம் பதிவேற்றப்பட்டதாகவும் தேர்வு நாளில் அந்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி யாரும் தேர்வு எழுதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

17 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்