மும்பை: இந்தி நடிகை பூனம் பாண்டே, கடந்த சில நாட்களுக்கு முன் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதை பூனம் பாண்டேவின் மேலாளரும் உறுதிசெய்ததால், அந்த செய்தி இந்தியா முழுவதும் பரபரப்பானது. ஆனால், மறுநாள், தான் இறக்கவில்லை என்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவ்வாறு இறப்பு நாடகம் நடத்தியதாகக் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது வழக்கு தொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவர் கணவர் சாம் பாம்பேவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு, கான்பூரில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபைசான் அன்சாரி என்பவர் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். ‘பூனம் பாண்டே, அவர் கணவர் சாம் பாம்பே ஆகியோர் சொந்த விளம்பரத்துக்கு இது போன்று செய்து கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு விளையாடியுள்ளனர்” என்று தனது புகார் மனுவில் கூறியுள்ளார். கான்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago