25 வருடத்துக்கு பிறகு திருமணத்தை பதிவு செய்த நடிகர் அர்ஷத் வர்சி

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகர் அர்ஷத் வர்சி. இவர், தேரே மேரே சப்னே, முன்னாபாய் எம்.பி.பி.எஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மரியா என்பவரை கடந்த 1999-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் திருமணம் முடிந்து இப்போது 25 வருடம் ஆகிறது. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் திருமணத்தை சட்டரீதியாகப் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி அர்ஷத் வர்சி கூறும்போது, திருமணப் பதிவு முக்கியம் என்று நினைக்கவில்லை. அதுபற்றிய எண்ணமும் தோன்றியதில்லை. ஆனால், சொத்து விஷயங்களைக் கையாள அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். சட்டத்துக்காக நாங்கள் இப்போது பதிவு செய்துகொண்டோம் என்று தெரிவித்துள்ள அவர், மற்றபடி நாங்கள் எப்போதும் ஒன்றாகவே உணர்கிறோம் என்று கூறியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்