மும்பை: ‘பைட்டர்’ படத்தின் பின்னடைவு குறித்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.
ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு போதிய வரவேற்பை பெறாத காரணத்தினால் பாக்ஸ் ஆஃபீஸிலும் படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாதது குறித்து பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “ஃபைட்டர் மிகப்பெரிய பாய்ச்சல். அதிகம் ஆராயப்படாத வான்வெளி பயணம் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிது. நம் நாட்டில் 90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணிக்காதவர்கள். சொல்லப்போனால் பலர் விமான நிலையத்துக்கு கூட செல்லாதவர்கள். அப்படியிருக்கும்போது படத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு எப்படி புரியும்?. அதனால் அவர்கள் படத்தை அந்நியமாக உணர்ந்திருக்ககூடும். எனவே படம் அவர்களுக்கு கனெக்ட் ஆகாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் திரையரங்கில் படத்தைப்பார்க்கும்போது இது ஒரு பேஸிக்கான படம் என்பதை புரிந்துகொள்வீர்கள்” என்றார்.
சித்தார்த் ஆனந்தின் இந்த பேட்டியில் அவர் கூறிய “90 சதவீத மக்கள் விமானத்தில் பயணிக்காததால், அவர்களுக்கு படம் புரியவில்லை” என்ற கருத்து சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆகியுள்ளது. அப்படியென்றால் குற்றம் சார்ந்த படங்களைப் பார்க்கும்போது குற்றவாளியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு படம் புரியுமா? ‘அவெஞ்சர்ஸ்’ போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் வெற்றியடைய எல்லோரும் சூப்பர் ஹீரோக்களாக இருக்க வேண்டுமா? என பலரும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், “மர்டர் படம் நல்ல ஹிட். காரணம் 90 சதவீதம் பேர் யாரு ஒருவரை கொலை செய்தவர்கள்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், ‘கோய் மில் கயா’ படம் வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் 90 சதவீதம் பேர் ஏலியனை பெட்டாக வளர்க்கின்றனர்” என கலாய்த்துள்ளார்.
Koi Mil Gaya worked because 90% Indians have a pet alien friend. pic.twitter.com/Gmdr9M3pIn
— Sapan Verma (@sapanv) February 2, 2024
‘அவெஞ்சர் என்ட் கேம்’ படம் ஹிட்டானதற்கு காரணம் 90சதவீதம் பேர் சூப்பர் ஹீரோக்கள்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Koi Mil Gaya worked because 90% Indians have a pet alien friend. pic.twitter.com/Gmdr9M3pIn
— Sapan Verma (@sapanv) February 2, 2024
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago