மும்பை: அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் இணைந்து நடித்துள்ள பாலிவுட் படத்துக்கு ‘ஷைத்தான்’ (Shaitaan) என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வருவதில்லை என கூறிய ஜோதிகா, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ படம் பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்ததாக ‘ஷைத்தான்’ என்ற பாலிவுட் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஜய் தேவ்கன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago