மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைக்கிறார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - விமானப் படையில் துடிப்பான விமானியாக வலம் வருகிறார் ஹ்ரித்திக் ரோஷன். ‘ஃபைட்டர் என்பவன் தன் இலக்குகளை அடைபவன் மட்டுமல்ல.. மாறாக அதனை இரண்டாக தகர்ப்பவன்’ என்னும் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர், தேசபக்தி, காதல், கூஸ்பம்ப்ஸ் சாகச காட்சிகள் என செல்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் கொடுக்கப்பட்ட பதிலடியை இப்படம் பேசுகிறது. மயிர்க்கூச்செரியும் வசனங்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என டெம்ப்ளேட் ஆன சில விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும், மேக்கிங் மிரட்டலாகவே இருப்பதாக தெரிகிறது. 'நீங்கள் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கலாம், ஆனால் அதன் உண்மையான ராஜா நாங்கள் தான்’ போன்ற வசனங்களும் கவனம் பெறுகின்றன. ‘ஃபைட்டர்’ ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago