மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.211.13 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘டன்கி’. டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஷாருக்கானும், ஹிரானியும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு பிரிதம் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.58 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இதனையடுத்து தற்போது 4 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.211.13 கோடியை வசூலித்துள்ளது. ஷாருக்கானின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ இரண்டு படங்களுமே தலா ரூ.1000 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட படங்களை ஒப்பிடும்போது தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் ‘டன்கி’யின் வசூல் குறைவு தான் என்றாலும், இப்படம் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்படாமல் வெறும் இந்தியில் மட்டுமே வெளியாகிருப்பதையும் கவனிக்கவேண்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago