கமலின் ‘ஹேராம்’ படம் முலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகர் சவுரப் சுக்லா. தொடர்ந்து, அந்நியன், தில்லுக்குத் துட்டு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இயக்குநருமான இவர், இந்தியில் சில படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாகக் கடந்த 2012-ம் ஆண்டு ‘ஐ எம் 24’ என்ற காமெடி படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் 11 வருடத்துக்குப் பிறகு மீண்டும் அவர் படம் இயக்கி இருக்கிறார் . படத்துக்கு ‘டிரை டே’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதில் ஜிதேந்திர குமார், ஸ்ரியா பில்கோன்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் பற்றி சவுரப் சுக்லா கூறும்போது, “ இது பொழுதுபோக்கு படம் என்றாலும் சமூகத்துக்கான செய்தியும் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் நிச்சயமாக அதிலிருந்து ஏதாவதொன்றைக் கற்றுக் கொள்ள முடியும்” என்றார். “இதில் பணியாற்றியதில், நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பொழுதுபோக்கு படமாக இது இருந்தாலும் சில கேள்விகளை நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ள இந்தப் படம் அனுமதிக்கும்” என்று ஸ்ரியா தெரிவித்துள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைம் தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago