மும்பை: பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய். இவர், தமிழில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். விவேக் ஒபராயின் கணக்காளர் தேவன் பஃப்னா என்பவர், மும்பை அந்தேரி போலீஸில் ஜூலை மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் சாஹா, அவர் தாய் நந்திதா, அவர் மனைவி ராதிகா ஆகியோரை கொண்ட அனந்திதா என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என விவேக் ஓபராயிடம் அவர்கள் கூறினர். இதை நம்பி அவரும், அவர் மனைவியும் ரூ.1 கோடியே 55 லட்சத்தை முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தை தங்கள் சொந்த தேவைக்குப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் சாஹாவை கைது செய்துள்ளனர். இவர், நவாஸுதின் சித்திக் நடித்த ஹத்தி என்ற படத்தைத் தயாரித்தவர் ஆவார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago