ஆக்‌ஷனுடன் தந்தை - மகன் உறவு: ரன்பீர் - ராஷ்மிகாவின் ‘அனிமல்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் படம் ‘அனிமல்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் பூரணிக், ஜானி, ஆஷிம் கெம்சன் உள்ளிட்டோர் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் டிசம்பர் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் எப்படி? - டீசரின் முதல் காட்சியிலேயே படம் அப்பா - மகன் உறவைப் பற்றியது என்பதை உணரமுடிகிறது. ‘இந்த உலகத்திலேயே என் அப்பா தான் பெஸ்ட்’ என்கிறார் ரன்பீர். ஆனால் அவரை அடித்து வதைக்கும் அப்பாவாக அனில் கபூர். அதேசமயம், ‘புள்ளைய எப்டி வளக்குறதுன்னே எனக்கு தெரியல’ அனில் கபூர் கூற, ‘நல்லா வளத்துருக்கீங்க அப்பா’ என்கிறார் ரன்பீர். இதன் மூலம் படம் தந்தை - மகனுக்கும் இடையிலான சிக்கலான விஷயங்களை பேசுவதுடன் வன்முறையையும் கையிலெடுக்கிறது.

‘சாக்லெட்’ பாயாக இருக்கும் ரன்பீர் ஒருகட்டத்தில் தாடி வளர்த்து, ஹாம்ஸ் தெரியும்படி ‘பீஸ்ட்’ மோடுக்கு மாறுகிறார். தந்தைக்காக ஒருவரை பழிவாங்க ‘அனிமல்’ஆக மாறுவதாக கணிக்க முடிகிறது. பிரமாண்டமான முறையில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது. டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்