ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இப்படத்துக்கான புக்கிங் ஏற்கெனவே அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான புக்கிங் திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தியில் விஷால் தத்லானி, ஷில்பா ராவ் ஆகியோர் பாடியுள்ளனர்.
» தனுஷூடன் இணையும் நடிகர் நாகர்ஜூனா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» “விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; சூப்பர்ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது” - விஷால் பகிர்வு