மும்பையில் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ‘ஜவான்’ டிக்கெட்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்துக்கான டிக்கெட்கள் மும்பையில் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது.

இந்தநிலையில், இப்படத்துக்கான புக்கிங் ஏற்கெனவே அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. மும்பையில் ஒரு சில இடங்களில் இப்படத்துக்கான புக்கிங் இன்று திறக்கப்பட்டது. புக்கிங் திறக்கப்பட்ட 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இடங்களில் ரசிகர்கள் காட்சிக்கான டிக்கெட் ரூ.1100 வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

’ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

மேலும்